Saturday, February 21, 2009

எல்லாப்புகழும் AASCAR.ரஹ்மானுக்கே...

ஏனையோருக்கும் எம் ரஹ்மானுக்கும் வணக்கம்,

நாளை உலக அரங்கில் உமக்கு பரிவட்டம்,கட்டப்போவதோ ஆஸ்கார் கூட்டம்.உலகத்தமிழர்
அனைவரும் நாளை தலை நிமிரப்போவதாக உளவு சொல்லிகொண்டிருக்கிறார்கள் பலர்.
ஆனால் என் வரையில் இசை அரங்கில் இந்தியாவும் குறிப்பாக தமிழனும் என்றும் தலை நிமிர்ந்து தான் இருக்கிறோம்.வெவ்வேறு மொழிகள் கொண்டதை போல வெவ்வேறு இசை வகைகளையும் கொண்டது நம் நாடு.அத்தனை இசையையும் இசைக்கக்கூடிய திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள் நம்மிடம்தான் உள்ளார்கள் குறிப்பாக தமிழகத்தில்.
இசையை பொறுத்த வரை இந்தியா என்றும் முன்னிற்கிறது.
சுருங்க சொல்லப்போனால் ஆஸ்கார் குழுவுக்கும் அது இதுவரை விருது வழங்கிய
இசை அமைப்பாளர்களுக்கும் அவர்களுடைய அதாவது அவர்கள் நாட்டின் இசை மட்டும் தான் தெரியும்
ஆனால் நம் இசை அமைப்பாளர்களுக்கோ அவர்கள் இசையும் தெரியும்.
இங்கு இருப்பவர்களுக்கு இசை உலகமும் தெரியும் உலக இசையையும் தெரியும்.
ஆனால் ஆஸ்கார் இது வரை தலை கவிழ்ந்து அவர்கள்
நாட்டையும் அவர்கள் சகோதர நாடுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.
இன்று முதல் முறையாக ஆஸ்கார் தலை நிமிர்ந்து ஒரு தமிழனை பார்க்கிறது.
ஆகவே தமிழன் இசை உலகில் தலை நிமிர்ந்து தான் நிற்கிறான் இது வரை குனிந்திருந்த உலகம் அதாவது ஆஸ்கார் தமிழனையும் தமிழிசையையும் அண்ணாந்து பார்க்கிறது.
அதனை சாத்தியப்படுத்திய உமது சாதனைக்கு(இசைக்கு) ஒரு தமிழனாகவும்,இசை ரசிகனாகவும் வணங்குகிறேன்.நாளை ஆஸ்கார் உமக்கு கிடைக்காவிட்டால் அதில் உமக்கு அதாவது தமிழனுக்கு இழப்பில்லை அது ஆஸ்காருக்குத்தான்.
AR.ரஹ்மான் ஆஸ்கார்.ரஹ்மானாக வாழ்த்துகள்.

இப்படிக்கு,
இசை
@
இளையராஜாவின்
ரசிகன்,
கோ.திருமலைக் கோனேரி.

Saturday, January 3, 2009

கண்ணீர் அஞ்சலி-2008

சகாக்களுக்கு வணக்கம்,


எல்லோரும் வழக்கமாய் சொல்லும் வார்த்தைகளையே நானும் சொல்லி ஆரம்பிக்கின்றேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி நாம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டியதாய் எனக்கு தோன்றுவதையும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.எல்லோரும் பிறந்த புது ஆண்டான 2008-ஐ வரவேற்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினோம்,இறந்து போன 2008-ஐ பற்றிய வருத்தம் எதுவும் இல்லாமல். இதற்க்கு பலர் கூறும் பதில்-இறந்த காலத்தை பற்றி எதற்காக சிந்திக்க வேண்டும்,இனி வரும் காலமாவது நன்றாக அமையட்டுமே என்பதன் காரணமாக தான் இந்த கொண்டாட்டங்கள் என்று.ஆனால் நம் இறந்த காலங்கள் தான் நம் வருகாலத்தை தீர்மானிக்கும் என்பதை மறந்து விட்டோம். கடந்து போன வருடங்களில் நாம் எதை சரியாக செய்ய தவறினோமோ அதை இனி வரும் காலங்களில் சரி செய்வோம் என சபதம் ஏற்போம். உதாரணமாக இப்போது உலகை உலுக்கி கொண்டு இருக்கும் சுற்றுசூழல் பாதிப்புக்கள்(குளோபல் வார்மிங்),தீவிரவாதம்,சமுதாய சீர்கேடுகள் இவற்றை பற்றிய நமதுவிழிப்புணர்வு கடந்த ஆண்டுகளில் மிகக்குறைவே. அதனை 2009-இல் சரிசெய்வோம் என்னும் முடிவுக்கு வருவோம்,உலகம் முடிவுறாமல் தடுப்பதற்காக. வருடத்தின் முதல் நாள் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ வழி செய்வோம். அதற்கு இந்த ஆண்டில் முதல் அடி எடுத்து வைப்போம். "ஒன்று சேர்வோம், உலகம் காப்போம்".மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி அதற்க்கு முன் இறந்து போன 2008-க்காக வருத்தத்தையும் கூறி உங்களுடன் கைகோர்க்கிறேன்.

இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
கோ.திருமலைக் கோனேரி.